தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொல்லியல் ஆய்வு: 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு

தொல்லியல் ஆய்வு: 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு

தொல்லியல் ஆய்வு: 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு


UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM

ADDED : ஜூலை 20, 2014 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM ADDED : ஜூலை 20, 2014 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லண்டன்: நார்வே நாட்டில் 8,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் மண்டை ஓட்டை தொல்லியல் துறை நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

தென்மேற்கு ஓஸ்லோவில் உள்ள ஸ்டோக் பகுதியில் தொல்லியல் துறை நிபுணர்கள் கடந்த இரண்டு மாதங்களாக அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிடைத்த மண்டையோடு 8,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதனுடையது என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் கற்காலத்தை சேர்ந்த இரு வேறு தலைமுறைகளை சேர்ந்த எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆய்வுக் குழு தலைவர் காட் ரேடன் கூறியதாவது: மண்டையோட்டின் உதவியுடன் கற்காலத்தை சேர்ந்த மக்களின் மூளை மற்றும் அவர்கள் வாழ்க்கை முறை குறித்த தகவல்களை அறிய முடியும். சிறிது தொலைவில் பெரிய அளவிலான எலும்புகள் கிடைத்துள்ளன.

கி.மு. 5900ம் ஆண்டை சேர்ந்த இந்த எலும்புகள், மனிதர்களுடையதா அல்லது விலங்குகளுடையதா என்பதை அறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு ரேடன் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us