தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் கல்வி தின கட்டுரைப் போட்டி: சிவகாசியில் பரிசளிப்பு விழா

தினமலர் கல்வி தின கட்டுரைப் போட்டி: சிவகாசியில் பரிசளிப்பு விழா

தினமலர் கல்வி தின கட்டுரைப் போட்டி: சிவகாசியில் பரிசளிப்பு விழா


UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM

ADDED : ஜூலை 21, 2014 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM ADDED : ஜூலை 21, 2014 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: காமராஜர் பிறந்த நாளையொட்டி அவர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் தினமலர் நாளிதழ் சார்பில் கல்வி தின கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கட்டுரைகளை அனுப்பியிருந்தனர். இதில் சிறந்த கட்டுரைகள் எழுதிய 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று பரிசளிக்கப்பட்டது.

சிவகாசி காளீஸ்வரி லீ ஆர்சிட்ஸ்சில் பரிசளிப்பு விழா நடந்தது. ஐ.ஏ.எஸ். 2010 தேர்வில் அகில இந்திய சாதனை படைத்தவரும், கோவில்பட்டி சப்-கலெக்டருமான க.விஜயகார்த்திகேயன் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு, கேடயங்களை வழங்கினார்.

அவர் பேசியதாவது: மாணவர்களை சந்தித்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். நமது அனுபவம் மாணவர்கள் சாதிக்க வழிவகுக்கும் என்று நம்புகிறேன். தினமலர் நடத்திய ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் நான் மாணவராக பங்கேற்றுள்ளேன். 2003ம் ஆண்டில் நடத்திய வினாடி-வினா போட்டியில் பங்கேற்றுள்ளேன்.

தினமலர் நாளிதழ் செய்தி வெளியிடுவது மட்டுமின்றி, சமூகத்திற்கு தேவையான நிகழ்ச்சிகளை நடத்தி ஊக்குவிக்கின்றனர். மாணவர்கள் கட்டுரை, ஓவியம் வரைவதை எளிதாக எடுத்து கொள்ளக் கூடாது. எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். நான் சிறுவயதில் லெமன் ஸ்பூன் பந்தயத்தில் இருந்து இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான போட்டியானலும் முதல்ஆளாக எனது பெயரை பதிவு செய்வேன்.

தேனீக்களின் சுறுசுறுப்பு எனக்கு பிடிக்கும். நம்மால் தேனை திருட முடியும். ஆனால் உண்மையான தேன் தயாரிக்க முடியாது. எனவே மாணவர்கள் தேனீக்களாக இருங்கள். அந்தந்த வயதுக்கு ஏற்ற சோதனைகள் வரும்போது அதனை பக்குவத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

பெற்றோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த வயதில் நல்ல விஷயங்களை சிந்தித்தால் தான், படித்து வேலைக்கு போகும் போது நல்ல சிந்தனை உதவும். இவ்வாறு பேசினார்.

மாணவர்களுடன் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். ஐ.ஏ.எஸ். படிப்பு பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு சப்-கலெக்டர் பதிலளித்தார். மாணவர்கள் நன்றி தெரிவித்து பேசினர். அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது.

பரிசு பெற்றவர்கள்

மா.ஜ.அக்ஷயா, எம்.என்.ஆர்.டி., மகளிர் மேல்நிலை பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர். அ.ஆனந்தபாலாஜி, வி.எம்.ஜி.ஆர். சாரதா சக்தி மேல்நிலைப்பள்ளி, விருதுநகர். க. அங்காளஈஸ்வரி, காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி. சு.பாக்கியலட்சுமி, லார்டு பி.சி.அருணாசல நாடார் ஆவுடைத்தாய் அம்மாள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.

க.புவனேஸ்வரி, இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, முகவூர். மு.புவனேஸ்வரி, எஸ்.சி.எம்.எஸ்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாட்சியாபுரம். பா.சந்துரு, சா.இ.நா. எட்வர்டு பள்ளி, ஊமத்தம்பட்டி. ப.சிதம்பர சாத்விகா, பி.ஏ.சி.ராமசாமி ராஜா மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம். ஆர். கிறிஸ்டோபர், எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை. இ.டெய்ஸி ஏஞ்சல்பிரியா, செயின்ட் ஆண்டனிஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி, விருதுநகர்.

இரா.தேவகி, எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை. ரா. காயத்ரி, திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர். வே.காயத்திரி, வி.பி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணன் கோவில்.

தி.கோபிநாத், நவபாரத் மெட்ரிக்பள்ளி, ராஜபாளையம். போ.ஹரிணி, சவுத்சைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர். ரா.ஐசக், சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர். செ.ஜோஷிதா, அரிமா மேல்நிலைப்பள்ளி, சிவகாசி. கா.காளியம்மாள், சா.இ.நா. எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்.

ஜி.காமினி, பி.ஏ.சி.ஆர். அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம். அ.இரா. கார்த்திகேயன், எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை. மு.கோகிலா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம். சு.கோவர்த்தனா, ஸ்ரீரமண வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.

ம.மஞ்சுளாதேவி, அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர். ஜெ.மேகனாதேவி, எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை. ஜி.மோகன்ராஜ், சத்திரிய வித்யாசாலா ஆங்கில மேல்நிலைப்பள்ளி, விருதுநகர். சி.மோகனப்பிரியா, நவபாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ராஜபாளையம். ப.முருகன், சுரபி உண்டு உறைவிடப்பள்ளி, காரியாபட்டி.

ச.முருகேஸ்வரி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையா புரம். ரா.பாண்டீஸ்வரி, பி.ஏ.சி.ஆர். அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம். இ.ராதா கிருஷ்ணன், எஸ்.ஹெச்.என்.எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, சாத்தூர். டி.ரேணுகா, சாக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர். மு.சாய்ஜனனி, விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.

ரெ.சக்திஈஷ்வர், வி.எம்.ஜி.ஆர்.ஆர். சாரதா சக்தி மேல்நிலை பள்ளி, விருதுநகர். எம்.சங்கரமுருகேஸ்வரி, எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி. டி.சங்கரஈஸ்வரி, நவபாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ராஜபாளையம். எம்.ஷாலினி, நோபல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர். மா.செண்பகாதேவி, டி.டி.டி.ஏ.ஜெ.அ. உயர்நிலைப்பள்ளி, நாகலாபுரம்.

மு. சிந்து மீனாட்சி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரப்பட்டி. சு.சிவகிருத்திக், ஸ்ரீரமண வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம். மோ.சிவபிரதா, இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி. க.சிவப்பிரியா, சைவபானு ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை ஜி.சிவரஞ்சனி, திருச்சுழி உறவின்முறை நாடார் ச.வைத்தியலிங்கம் மேல்நிலைப்பள்ளி, திருச்சுழி.

பி.ஸ்ரீ.அமர்நாத், கே.வி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர். பா.சுபலட்சுமி, சத்திரிய மகளிர் மேல்நிலை பள்ளி, விருதுநகர். ம.சுமஸ்ரீ, சின்மயா வித்யாலயா பள்ளி, ராஜபாளையம். க.தேன்கவி, வி.எஸ்.கே.டி.மேல்நிலைப்பள்ளி, சிவகாசி. கு.வைத்தீஸ்வரி, சா.இ.நா.எட்வர்டு நடுநிலைப்பள்ளி, சாத்தூர். கே.வேலுசாமி, ராம்கோ வித்யாலயா பள்ளி, விருதுநகர். கே.விஷவரூபன், கே.வி.எஸ். பதின்ம மேல்நிலைப்பள்ளி, விருதுநகர். ர.யஷ்வந்த், கே.வி.எஸ். ஆங்கிலப்பள்ளி, விருதுநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us