UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM
ADDED : ஜூலை 22, 2014 12:21 PM
மைசூர்: ஜே.எஸ்.எஸ். மகாவித்யாபீடாவுடன் இணைந்து, த டைம்ஸ் பவுண்டேஷன், மாற்றுத் திறனாளிகளுக்கான ஜே.எஸ்.எஸ். பாலிடெக்னிக்கில், பார்வையற்றவர்களுக்கான மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் படிப்பை நடத்துகிறது.
இந்த வகையான படிப்பு, இந்தியாவிலேயே, இப்போதுதான் முதன்முறையாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு, ரேடியா/வீடியோ ஜாக்கிகள், நிகழ்ச்சி வழங்குநர், தொழில்நுட்ப எழுத்தர்கள் மற்றும் டிஜிட்டல் ஜர்னலிசம் ஆகிய துறைகளில் சிறப்பான பயிற்சியளிப்பதே இப்படிப்பின் நோக்கம்.
இப்படிப்பு, பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கானது என்பதால், குரல் அடிப்படையிலான ஜர்னலிசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்படிப்பிற்கான பாடத்திட்டம், கர்நாடக அரசின் தொழில்நுட்ப கல்விக்கான வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பு, 3 ஆண்டு காலஅளவைக் கொண்டது. முதல் 2 செமஸ்டர்களில், அடிப்படை ஆங்கிலத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில், அவர்கள் தங்களுக்கான பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
