UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM
ADDED : ஜூலை 22, 2014 02:10 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: இளநிலை வனச்சரகர் பணிக்கான பணியிடங்களை (2008)100 சதவீதம் வனவியல் மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என்ற அரசாணை எண் 108ஐ திருத்தி தற்போது அரசாணை எண் 76ன் (2014) கீழ் 25 சதவீதமே வனவியல் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வனவியல் மாணவர்களுக்கு மீண்டும் 100 சதவீத பணிவாய்ப்பு வழங்கக்கோரி மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
