தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜப்பானில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு

ஜப்பானில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு

ஜப்பானில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு


UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM

ADDED : ஜூலை 23, 2014 01:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM ADDED : ஜூலை 23, 2014 01:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை:

கிழக்காசிய மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் ஜப்பானில் நடக்க உள்ளன. அதில் பங்கேற்க கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் சிறந்து விளங்கும் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரு மாணவர், ஒரு மாணவி என மாவட்டத்திற்கு இருவரை தேர்வு செய்ய வேண்டும்.

ஏற்கனவே இப்போட்டிக்கு சென்று வந்த மாணவர்களின் பெயர்கள் இடம் பெறக்கூடாது.

www.mhrd.gov.in என்ற இணையதள முகவரியில் மாணவர்களுக்கான விசா மற்றும் நுழைவுப்படிவம் தரப்பட்டுள்ளது. விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் இரு ஆசிரியர்களின் பெயரையும் குறிப்பிட வேண்டும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பாஸ்போர்ட் பெற்றிருக்க வேண்டும். போட்டிக்கு செல்வதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us