தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் குறைகிறது: உயர் கல்வித் துறை அமைச்சர்

பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் குறைகிறது: உயர் கல்வித் துறை அமைச்சர்

பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் குறைகிறது: உயர் கல்வித் துறை அமைச்சர்


UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM

ADDED : ஜூலை 23, 2014 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM ADDED : ஜூலை 23, 2014 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பொறியியல் படிப்பில் சேர மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது என உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:


ஆறுமுகம்: வால்பாறை தொகுதியில் ஆனைமலை ஒன்றியத்தில் மாசானியம்மன் கோவில் தேவஸ்தானம் சார்பில், பொறியியல் கல்லூரி அமைக்க அரசு முன்வர வேண்டும். கல்லூரிக்கான இடம் வழங்க அப்பகுதியினர் தயாராக உள்ளனர்.

அமைச்சர் பழனியப்பன்: பொறியியல் கல்வியில் அரசு ஒதுக்கீடாக 2.11 லட்சம் இடங்கள் உள்ளன. தனியார் ஒதுக்கீட்டையும் சேர்த்து மொத்தமாக 2.88 லட்சம் இடங்கள் நடப்பாண்டில் உள்ளன. இவற்றில் சேர 1.60 லட்சம் விண்ணப்பங்களே வந்துள்ளன.

இம்மாதம் 7ம் தேதி துவங்கிய கவுன்சிலிங்கில் தினந்தோறும் 4,000 மாணவர்கள் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் 1,000 மாணவர்கள் கூட வருவதில்லை. விண்ணப்பித்த மாணவர்களில் 30 சதவீதம் பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்பதில்லை. அவர்களது மன நிலை மாறிவிட்டது.

பாரம்பரிய கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புகின்றனர். எனவே புதிதாக பொறியியல் கல்லூரி துவங்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.

பாலபாரதி: அரசுப் பள்ளிகளின் மதிப்பை உயர்த்தும் வகையில் பிளஸ் 2 படிப்பை அரசுப் பள்ளிகளில் முடித்தவர்களுக்கு கவுன்சிலிங்கில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அமைச்சர்: கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொறியியல் தேர்வுக்கான நுழைவுத் தேர்வை அரசு ரத்து செய்துள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது சாத்தியமில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us