UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM
ADDED : ஜூலை 23, 2014 11:29 AM
தேவாரம்: கோம்பை பள்ளியில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரிப்பது குறித்த பயிற்சி அய்யா பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
குள்ளப்புரம் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி மாணவிகள் 9 பேர் கிராம தங்கல் திட்டப் பயிற்சிக்காக உத்தமபாளையம் பகுதியில் முகாமிட்டுள்ளனர். நேற்று பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கும் முறை குறித்து கோம்பை அய்யா பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
உத்தமபாளையம் விவசாயத்துறை உதவி இயக்குநர் ராஜ் மனோகரன் பள்ளி மாணவர்களிடம் கூறியதாவது: இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ரசாயன உரம், பூச்சி கொல்லி தெளிப்பதால் புற்று நோய் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. பூச்சி தாக்குதல் செடியில் இருந்தாலும், பூச்சி கொல்லி மருந்து தெளிக்காமல் ரசாயன உரமிடாமல் செடிகளை பராமரிக்க தெரிந்து கொள்ள வேண்டும்.
விவசாய தொழில்நுட்பம் குறித்த தெளிவான பார்வை மிக முக்கியமானது. விவசாயம் சார்ந்த பட்டம் பெற்றவர்கள் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ளன என்றார்.
தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியர் உதயக்குமார், பள்ளி தலைமையாசிரியர் பாலாஜி, விவசாயத்துறை தொழில்நுட்ப வல்லுநர் ராஜேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காய்கறி, கீரை பயிரிடுவது, பராமரிப்பது, பலனை அறுவடை செய்வது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
