அகில இந்திய இறகுப்பந்து போட்டிகள் சிவகாசியில் நடக்கிறது
அகில இந்திய இறகுப்பந்து போட்டிகள் சிவகாசியில் நடக்கிறது
UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM
ADDED : ஜூலை 23, 2014 01:52 PM
சிவகாசி: அகில இந்திய சப்-ஜூனியர் இறகுப் பந்து ரேங்கிங் போட்டிகள் சிவகாசியில் ஆக.18ல் துவங்குகின்றன.
விருதுநகர் மாவட்ட இறகுப்பந்து கழகம் சார்பில் சிவகாசி ஏ.ஜெ. ஸ்டேடியத்தில் ஆக.18 முதல் 24 வரை அகில இந்திய சப்- ஜூனியர் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் 13 முதல் 15வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்கின்றனர். ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடக்கும். போட்டியில் 20 மாநிலங்களை சேர்ந்த 1400 பேர் பங்கேற்கின்றனர்.
போட்டிகளை சர்வதேச நடுவர்கள் 20 பேர் பங்கேற்று நடத்துகின்றனர். முதல் முன்று நாட்கள் தகுதிச் சுற்று நடக்கும். பின் காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் நடக்க உள்ளது.
இறகு பந்து கழக நிர்வாகி போஸ், புரவலர் காஞ்சனா, கழக தலைவர் செந்தியப்பன், ஏ.ஜெ. ஸ்டேடிய நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
போட்டி குறித்த விபரங்களுக்கு 99949 20063ல் தொடர்பு கொள்ளலாம்.
