தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆந்திர மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்: தெலுங்கானா முதல்வர்

ஆந்திர மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்: தெலுங்கானா முதல்வர்

ஆந்திர மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்: தெலுங்கானா முதல்வர்


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தி்ல் பயின்று வரும் ஆந்திர மாநில மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். இதனால் ஆந்திர மாணவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் சந்திரசேகரராவ் கூறியிருப்ப தாவது: 1956-ம் ஆண்டிற்கு முன்பிருந்தே தெலுங்கானாவை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள் ஆந்திராவில் கல்விபயின்று வந்தால் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடரும்.

அதே நேரத்தி்ல் ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவில் உயர் கல்வி பயின்று வரும் ஆந்திர மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும். இதற்கான சட்டம் இயற்றப்படும். அடுத்த பத்தாண்டுகள் வரையில் இந்த சட்டம் அமலில் இருக்கும் படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மாணவர்கள் பீதி

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் இந்த அறிவிப்பால், தெலுங்கானா பகுதியில் உயர் கல்வி பயின்று வரும் ஆந்திர மாணவர்கள் தங்களின் கல்வி நிலை பாதிக்கப்படுமோ என்ற பீதியில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us