தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலவரையின்றி கல்லூரி திடீர் மூடல்: மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

காலவரையின்றி கல்லூரி திடீர் மூடல்: மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

காலவரையின்றி கல்லூரி திடீர் மூடல்: மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: காலவரையற்ற கல்லூரி மூடல் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு, வீரப்பன்சத்திரம் சி.என். கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பல அமைப்பினர் கடந்த சில நாட்களாகவே தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்துக்கு கல்லூரி பேராசிரியர்களும் ஆதரவு தெரிவித்து, கல்லூரி முன்புறம் ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகள் தனியார் அமைப்புகளும் மாணவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் கல்லூரி முன் மாணவ மாணவியர் வாயில் கதவை மூடி தர்ணாவில் ஈடுபட்டனர். பின் கலெக்டரிடம் இது தொடர்பாக மனுவும் அளித்தனர்.

போராட்டத்தின் அடுத்தகட்டமாக 23ம் தேதி முதல் மூன்று நாட்கள் உள் இருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவ மாணவியர் அறிவித்தனர். இந்நிலையில் காலவரையின்றி மூடப்படுவதாக கல்லூரி முதல்வரின் உத்தரவு நேற்று முன்தினம் மாலை கல்லூரி நோட்டீஸ் போர்டு கல்லூரியின் முன்புற கேட்களில் ஒட்டப்பட்டு இருந்தது. கல்லூரி நுழைவு வாயிலை கடந்து யாரும் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து கேட்களும் பூட்டப்பட்டன.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவியர் கேட் பூட்டப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றனர். இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் மாணவ மாணவியர் கல்லூரி கேட் முன் தரையில் அமர்ந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மாணவர்கள் கூறியதாவது

கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசிக்காமல் கல்லூரி முதல்வர் தன்னிச்சையாக முடிவு எடுத்து காலவரையின்றி கல்லூரியை மூட உத்தரவிட்டு உள்ளார்.

இக்கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 13 ஆண்டுகளாகவே போராடி வருகிறோம். எனவே 52 ஏக்கர் பரப்பிலான இக்கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி கடந்த வாரம் கல்லூரி மாணவ மாணவியர் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்த முறைப்படி கால அளவில் அனுமதி கோரி பெறவில்லை. மாறாக டவுன் டி.எஸ்.பி. யிடம் மாணவ மாணவியர் திடீரென ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us