தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் "ராகிங்" தடுப்புக்குழு: சீனியர் மாணவர்கள் கலக்கம்

கல்லூரிகளில் "ராகிங்" தடுப்புக்குழு: சீனியர் மாணவர்கள் கலக்கம்

கல்லூரிகளில் "ராகிங்" தடுப்புக்குழு: சீனியர் மாணவர்கள் கலக்கம்


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 12:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 12:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: "ராகிங்" செய்யும் மாணவர்கள் மீது எவ்வித தயக்கமும் இன்றி நடவடிக்கை பாயும் என்பதால் சீனியர் மாணவர்கள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் "ராகிங்" செய்வதால் அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கொடுமை தாங்காமல் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில சமயங்களில் அடிதடி நடக்கிறது; அது கொலையிலும் முடிகிறது. அதனால் "ராகிங்" முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதோடு, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும், கல்லூரி நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து கல்லூரிகளில் புகார் பெட்டி வைத்தல், கல்லூரி முதல்வர் தலைமையில் "ராகிங்" தடுப்புக்குழு அமைத்தல், குழு உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண்களை கல்லூரி அறிவிப்பு பலகையில் வெளியிடுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இத்தகைய தீவிர நடவடிக்கையையும் மீறி சில சீனியர் மாணவர்கள், ஜூனியர்களை "ராகிங்" செய்கின்றனர். தங்கும் விடுதிகளில் சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை "ராகிங்" என்ற பெயரில் மிரட்டுவதும் அடிப்பதும் நடக்கிறது.

நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு துவங்கியுள்ளது. "ராகிங்" தடுப்புக்குழு கண்காணிப்பு, கல்லூரிகளில் தீவிரமடைந்துள்ளது.

மூன்றாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி, "ராகிங்"கில் ஈடுபட்டால் எவ்வித பாரபட்சமுமின்றி சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

"ராகிங்"கில் ஈடுபடும் மாணவர்கள் முதல்கட்டமாக "சஸ்பெண்ட்" செய்யப்படுவர்; விசாரணைக்குபின் கல்லூரியை விட்டு நீக்கப்படுவர். பின் போலீஸ் நடவடிக்கை மூலம் அவர்களுக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது. வேறு கல்லூரியில் சேருவதும் தடைபடும் வாய்ப்புள்ளதால் "ராகிங்"கில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கல்லூரிகள் தரப்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் முதலாமாண்டு மாணவர்களிடமும் "சீனியர் மாணவர்கள் யாரேனும் "ராகிங்" செய்தால் எவ்வித அச்சமும் இன்றி "ராகிங்" தடுப்புக்குழு மற்றும் வகுப்பு ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவிக்கலாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வித தயக்கமின்றி கடும் நடவடிக்கை எடுக்கும் முடிவில், கல்லூரி நிர்வாகங்கள் உள்ளதால் சீனியர் மாணவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us