தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களை ஏற்ற மறுக்கும் ஷேர் ஆட்டோக்கள்

பள்ளி மாணவர்களை ஏற்ற மறுக்கும் ஷேர் ஆட்டோக்கள்

பள்ளி மாணவர்களை ஏற்ற மறுக்கும் ஷேர் ஆட்டோக்கள்


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 01:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 01:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: பள்ளி நேரத்தில் மாங்கால் கூட்ரோடு - காஞ்சிபுரம் வழியில் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி செவிலிமேடு பகுதிவாசிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமம் அருகே கடந்த 11ம் தேதி பள்ளி மாணவிகளை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து பள்ளி மாணவர்களை ஏற்றும் ஷேர் ஆட்டோ மீது போலீசார் கிடுக்கிப்பிடி காட்டி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களை ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் ஆட்டோவில் ஏற்ற மறுக்கின்றனர்.

இதனால் கடந்த 14ம் தேதி குருவிமலை கிராம மக்கள், அந்த பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று செவிலிமேடு பகுதியிலும் பள்ளி மாணவர்களை ஏற்ற ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.

அப்பகுதி மாணவர்கள் அனைவரும் பேருந்தை நம்பி பள்ளி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதே சமயம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பேருந்து வருவதில்லை; அதனால் பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல சிரமப்படுகின்றனர் என புகார் எழுந்தது.

இதனால் மாங்கால் கூட்ரோடு - காஞ்சிபுரம் வழியாக பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட அப்பகுதிவாசிகள் நேற்று காலை 9:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த காஞ்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தினர். அவ்வழியாக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே அப்பகுதிவாசிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us