தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளம் விஞ்ஞானி விருது அறிவிப்பு

இளம் விஞ்ஞானி விருது அறிவிப்பு

இளம் விஞ்ஞானி விருது அறிவிப்பு


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 02:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 02:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி மைய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானி கணேஷ்,35 இந்த ஆண்டிற்கான சி.எஸ்.ஐ.ஆர். இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று முறை இந்த விருதினை பெற்ற ஆய்வகம் என்ற பெருமையை சிக்ரி பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சி.எஸ்.ஐ.ஆர். சார்பில் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டு வருகிறது. 2012-ல் சிக்ரியை சேர்ந்த லஷ்மி நரசிம்மன், 2013-ல் எஸ்.கே.பட் ஆகியோர் பெற்றனர். இந்த ஆண்டு விஞ்ஞானி கணேஷ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

வரும் செப்.26-ம் தேதி புதுடில்லியில் நடக்கும் சி.எஸ்.ஐ.ஆர். நிறுவன நாள் விழாவின் போது பிரதமர் மோடியால் இவருக்கு விருது வழங்கப்பட உள்ளது. விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வீதம் 5 ஆண்டுக்கு ஆய்வுக்கான நிதி உதவி, விருது பெறுபவரின் 45 வயது நிறைவு பெறும் வரை மாதம் ரூ.7,500 மதிப்பு ஊதியம் வழங்கப்படும்.

விஞ்ஞானி கணேஷ்,35, மேற்கொண்ட அடிப்படை மற்றும் பயன்பாட்டிற்கான உகந்த மின் தகடுகள் - மின் கரைசலுக்கு இடையேயான குறுக்கீட்டு பாதையில், எலக்ட்ரான்களின் பரிமாற்றம் குறித்த ஆய்வினை கவுரவித்து வழங்கப்பட்டுள்ளது.

உலோகம் மற்றும் குறைமின் கடத்திகள் மின்கரைசலுடன் ஏற்படுத்தும் இணைப்பு படலமான பரப்பில் நிகழ்த்தப்படும் தேர்ந்த ஆய்வுகளின், முடிவுகள் மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் நல மேம்பாட்டிற்கான நுண்ணுணர்வுக் கருவிகளிலும், ஆற்றல்சார் உபகரணங்களிலும் பயன்படும் வகையில், அவர் வடிவமைத்ததால் இந்த விருதுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவரது ஆய்வு முடிவானது தண்ணீரை சுத்திகரிக்கவும், நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை பிரித்தறியவும் பயன்பட வல்லது. உயிரிக் கழிவு மற்றும் ஆலைக்கழிவுகளிலிருந்து நுண்ணுயிர் சார்ந்த ஆற்றலை உற்பத்தி செய்யும் கலன்களின் உதவியுடன் மின் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்ற நோக்கில் இவர் மேற்கொண்டுள்ள ஆய்வும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us