தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்றும், நாளையும் ராஜேந்திர சோழன் சதய திருவிழா கொண்டாட்டம்

இன்றும், நாளையும் ராஜேந்திர சோழன் சதய திருவிழா கொண்டாட்டம்

இன்றும், நாளையும் ராஜேந்திர சோழன் சதய திருவிழா கொண்டாட்டம்


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 02:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 02:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாமன்னன் ராஜேந்திரசோழனின் சதய திருவிழா இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது.

சோழ மன்னர்களில் ராஜராஜ சோழனுக்கு அடுத்தபடியாக சரி்த்திரத்தில் பெரிய அளவில் பேசப்படுபவன் ராஜேந்திரசோழன். ராஜ ராஜ சோழனின் மகனான இவன் பல போர்களை நடத்தி, சோழ சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினான். மிகப் பெரிய வீரரான ராஜேந்திரசோழன், பரகேசரி, யுத்தமல்லன், மும்முடிசோழன், கங்கைகொண்ட சோழன் என பல விருதுகளால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளான்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரரர் கோவில் இன்றும் அம்மன்னனின் பெருமையை உலகிற்கு பறைசாற்றி வருகிறது. பல சாதனைகளையும், கலைப்படைப்புக்களையும் உருவாக்கிய இம்மன்னன் கடந்த 1044ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் பிரமதேசம் என்ற இடத்தில் இறைவனை வணங்கியபடி உயிர் நீத்தான்.

இம்மன்னன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரத்தில் இன்றும், நாளையும் விழா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us