UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM
ADDED : ஜூலை 25, 2014 10:48 AM
அ நிறம் | அளவு
சேத்துப்பட்டு: பள்ளி அளவிலான, மேசை பந்து போட்டியில், 600 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
கீழ்ப்பாக்கம், ருக்மணி பள்ளி சார்பில், அதன் வளாகத்தில், பள்ளிஅளவிலான மேசை பந்து போட்டி வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
பல்வேறு பள்ளிகளில் இருந்து, 350 மாணவர்கள், 250மாணவிகள் என 600 பேர் பங்கேற்கின்றனர். இறுதி போட்டிகளில், சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
