தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜப்பான் கிழக்காசிய இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு

ஜப்பான் கிழக்காசிய இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு

ஜப்பான் கிழக்காசிய இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு


UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM

ADDED : ஜூலை 25, 2014 02:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM ADDED : ஜூலை 25, 2014 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜப்பான் கிழக்கு ஆசிய இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, பள்ளிக் கல்வி இயக்குநர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜப்பான் கிழக்கு ஆசிய இணைப்பு பணி ஒப்பந்தப்படி, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கான இளையோர் பரிமாற்ற திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டிற்கு மாணவர்களை, புதுச்சேரியிலிருந்து அனுப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜப்பான் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை இளைஞர்கள் மத்தியில் தோற்றுவிப்பதும், ஆசிய மற்றும் ஓசியானிக் நாட்டில் உள்ள இளைஞர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பு கொள்வதற்கும் ஆழமான அடித்தளம் இடுவதுதான், இப் பயணத்தின் முக்கிய நோக்கம்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், வரும் அக்டோபர் 20-28, நவம்பர் 10-18, டிசம்பர் 8-16 ஆகிய தேதிகளில், மூன்று அணிகளாக ஜப்பான் செல்ல உள்ளனர்.அதன்படி, புதுச்சேரி மாநிலத்திலிருந்து 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 14 முதல் 18 வயது வரை உள்ள 30 மாணவர்களும், 50 முதல் 54 வயது வரையுள்ள 3 ஆசிரியர்களும் (அரசு மற்றும் தனியார் பள்ளிகள்) பரிந்துரைக்கப்பட உள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளாக இருப்பார்கள். பரிந்துரைக்கப்பட்டவர்களில், தகுதியானவர்களை மத்திய அரசு தேர்ந்தெடுக்கும்.

இதற்கான விண்ணப்பத்தினையும் மற்றும் தேர்வு தகுதிகளையும், www.mhrd.gov.in (under the link for the Department -amp; Literacy Secondary Education -gt; Autonoums Bodies -gt; CBSE-gt;jenesus) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக, வரும் 30ம் தேதி மாலை 4.00 மணிக்குள் பள்ளி கல்வித்துறையின் இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us