தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜெர்மனியில் படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 114% அதிகரிப்பு

ஜெர்மனியில் படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 114% அதிகரிப்பு

ஜெர்மனியில் படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 114% அதிகரிப்பு


UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM

ADDED : ஜூலை 26, 2014 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM ADDED : ஜூலை 26, 2014 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஜெர்மனி நாட்டிற்கு உயர்கல்வி மேற்கொள்ள செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 114% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டிலிருந்து பார்க்கையில், ஜெர்மனிக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இந்தளவு அதிகரித்துள்ளது என்று ஜெர்மன் அகடமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ்(DAAD) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2008-09ம் கல்வியாண்டில், ஜெர்மனியில் உயர்கல்வி சேர்ந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 3,516 என்ற அளவில் இருந்தது. அதேசமயம், 2012-13ம் கல்வியாண்டில், 7,532 என்ற அளவில் அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

ஜெர்மனி தவிர, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் இந்திய மாணவர்கள், உயர்கல்விக்காக நாடிச் செல்லும் நாடுகளாக உள்ளன.

தனது உயர்கல்வி நிறுவன வளாகங்களில், ஐந்தாவது பெரிய இந்திய மாணவர் எண்ணிக்கையை வைத்திருக்கும் ஜெர்மனி, ஆங்கில மொழியில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் விசா விதிமுறைகளை எளிமையாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, இடைவெளிகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us