தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.என். கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரிக்கை

சி.என். கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரிக்கை

சி.என். கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரிக்கை


UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM

ADDED : ஜூலை 26, 2014 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM ADDED : ஜூலை 26, 2014 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சி.என். கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மாவட்ட கல்வி பாதுகாப்பு குழு கேட்டு கொண்டுள்ளது.

ஈரோடு மாவட்ட கல்வி பாதுகாப்பு குழு கூட்டம், அமைப்பாளர் செந்தாமரை தலைமையில் நடந்தது. பல்வேறு சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். சி.என். கல்லூரியை, அரசு கல்லூரியாக மாற்றுவதற்கான அறிவிப்பில் தமிழக அரசு காட்டும் மெத்தன போக்குக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

கடந்த 16 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஈரோடு சி.என். கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வது. இக்கோரிக்கையை வலியுறுத்தி பல முறை முறையீடு செய்தும், பலன் ஏதும் ஏற்படவில்லை.

உச்ச நீதிமன்றம் இக்கல்லூரியை அரசு கல்லூரி என்று தீர்ப்பளித்த பின்னரும் கூட தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கல்லூரியாக அறிவிக்கப்படாததால் போதிய நிதியின்றி, கல்லூரி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட போவதில்லை. ஈரோட்டில் அரசு கல்லூரி இல்லை என்ற நிலை இதனால் மாறும்.

உயர் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஏழை, எளிய மாணவர்கள் நலன் கருதி தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us