UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM
ADDED : ஜூலை 28, 2014 10:18 AM
அ நிறம் | அளவு
சென்னை: உலக தெய்வீக நிறுவனம்,(காட்) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி சென்னையில் நடந்தது.
மஹாரண்யம் முரளீதர சுவாமிகள் வழிகாட்டுதல் படி உருவாக்கப்பட்ட, உலக தெய்வீக நிறுவனம் (காட்), சென்னை மையம் சார்பில், தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி வளாகத்தில், சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
சமூக சேவகர் துபாய் மணிகண்டன், போட்டியை துவக்கி வைத்தார். சென்னையில் உள்ள 45 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டி, இணையதளம் வழியாகவும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
அனைத்து போட்டிகளிலும் ஹரி ஸ்ரீ செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியர் பெருமளவில் வெற்றிபெற்றதால், அந்த பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
