தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெக்கானிக்கல் தேர்வு செய்தவர்கள் 18,334 பேர் - பெண்களிடம் விழிப்புணர்வு இல்லை

மெக்கானிக்கல் தேர்வு செய்தவர்கள் 18,334 பேர் - பெண்களிடம் விழிப்புணர்வு இல்லை

மெக்கானிக்கல் தேர்வு செய்தவர்கள் 18,334 பேர் - பெண்களிடம் விழிப்புணர்வு இல்லை


UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM

ADDED : ஜூலை 28, 2014 12:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM ADDED : ஜூலை 28, 2014 12:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவர்களில், 18,008 பேர் ஆண்கள். வெறும் 326 பேர் மட்டுமே பெண்கள். மெக்கானிக்கல் படிப்பை பெண்கள் மேற்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை மற்றும் அதில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்ற விழிப்புணர்வு, பல கல்வியாளர்களால் வழங்கப்பட்டும், ஏனோ, அத்துறையை நோக்கி போதுமான பெண்கள் இன்னும் வரவில்லை.

ஆனால், இதற்கு நேர்மாறான நிலைமை, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ளது. இப்பிரிவை, மொத்தம் 15,133 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல் பிரிவுக்கு அடுத்து இதுவே அதிகம். இதில், 4,136 பேர் மட்டுமே ஆண்கள். ஆனால், பெண்களின் எண்ணிக்கையோ 10,997 பேர்.

மூன்றாவதாக சிவில் பிரிவை, 11,557 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். ஆண்களின் கணக்கு 7,205 பேர் மற்றும் பெண்களின் கணக்கு 4,352 பேர்.

மெக்கானிக்கல் தமிழ்வழிப் பிரிவை 136 பேரும், தமிழ்வழி சிவில் பிரிவை 168 பேரும் தேர்வு செய்துள்ளனர். குறைந்தளவாக ஏரோநாட்டிகல் பிரிவை 802 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us