தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி எதிரே அமைந்த கழிவுநீர் கல்வாயை சீரமைக்க கோரிக்கை

பள்ளி எதிரே அமைந்த கழிவுநீர் கல்வாயை சீரமைக்க கோரிக்கை

பள்ளி எதிரே அமைந்த கழிவுநீர் கல்வாயை சீரமைக்க கோரிக்கை


UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM

ADDED : ஜூலை 28, 2014 02:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM ADDED : ஜூலை 28, 2014 02:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார்: கிளாய், ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி எதிரே, அமைந்துள்ள, திறந்தவெளி கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்டது கிளாய். இக்கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மாணவ, மாணவியர், ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவர்கள் வசதிக்காக, ஊராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளி சுற்றுச்சுவரில், குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இதை, மாணவர்கள் மட்டுமின்றி, பள்ளிக்கு அருகில் உள்ள பகுதி வாசிகளும் பயன்படுத்துகின்றனர். இதனால், குடிநீர் குழாயில் இருந்து, அதிகமான தண்ணீர் வெளியேறி, பள்ளி சுற்றுச்சுவர் அருகே தேங்கி உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது, தேங்கி நிற்கும் கழிவுநீரை மிதித்து செல்ல வேண்டி உள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சுவர் அருகே, தேங்கி நிற்கும் கழிவுநீரில், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பள்ளி எதிரே கழிவுநீர் தேங்காத வகையில், கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us