போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி
போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி
UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM
ADDED : ஜூலை 30, 2014 12:20 PM
கரூர்: மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் சார்பில், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்.,- ஐ.ஆர்.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.ஸி., தேர்வுக்கு வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஆகஸ்ட், 5ம் தேதி காலை, 11 மணிக்கு கரூர் நாரத கான சபாவில் நடக்கிறது.
கலெக்டர் ஜெயந்தி, தலைமை வகித்து பேசுகிறார். சென்னை பிரபா ஐ.எஸ்.எஸ்.,- ஐ.பி.எஸ்., அகாடமி இயக்குனர் பிரபாகரன், போட்டித் தேர்வுகள் குறித்து பேசுகிறார்.
2013 ம் ஆண்டில், ஐ.எஸ்.ஏ., தேர்வில் வெற்றிப்பெற்ற சேலம் பிரேம்குமார், ஐ.பி.,எஸ்., தேர்வில் வெற்றிப்பெற்ற கரூர் பூங்குழலி, தூத்துக்குடி முகம்மது சுஜிதா, ஐ.ஆர்.எஸ்., தேர்வில் வெற்றிப்பெற்ற மதுரை கவுதம் ஆகியோர் வெற்றிக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள், படித்த நூல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
