குறுவட்ட அளவிலான பள்ளி மாணவியருக்கான குழு விளையாட்டுப் போட்டி
குறுவட்ட அளவிலான பள்ளி மாணவியருக்கான குழு விளையாட்டுப் போட்டி
UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM
ADDED : ஜூலை 30, 2014 12:23 PM
கெங்கவல்லி: கெங்கவல்லி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தலைவாசல் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவியருக்கான குழு விளையாட்டுப் போட்டி நடந்தது.
தலைவாசல், தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் ஆகிய பகுதியில் உள்ள, 35 பள்ளிகளை சேர்ந்த மாணவியர் கபடி, கோ-கோ, வாலிபால், பூப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகளில் பங்கேற்றனர்.
வாலிபால் போட்டியில், ஆத்தூர் ஆதிதிராவிடர் பள்ளி முதலிடம், சாமியார் கிணறு ஜெயம் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம், தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக்பள்ளி, மூன்றாம் இடம் பிடித்தது.
கபடி போட்டியில், தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக்பள்ளி முதலிடம், தலைவாசல் மகளிர் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம், தம்மம்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடம் பிடித்தது.
கோ-கோ போட்டியில், கெங்கவல்லி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடம், உலிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாம் இடம், தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தது.
பூப்பந்து போட்டியில், ஆத்தூர் ஆதிதிராவிடர் பள்ளி மாணவி முதலிடம், தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம், ஜெயம் மெட்ரிக் பள்ளி, மூன்றாம் இடம் பிடித்தது.
எறிபந்து போட்டியில், மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், விவேகானந்தா மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம், தாகூர் மெட்ரிக் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
வீரகனூர் பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன், உடற்கல்வி துணை செயலாளர் செங்கதிர் உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர்.
