தினமலர் செய்தியால் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு பாதை வசதி
தினமலர் செய்தியால் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு பாதை வசதி
UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM
ADDED : ஜூலை 30, 2014 12:42 PM
திருத்தணி: தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு, நகராட்சி நிர்வாகம் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
திருத்தணி நகராட்சி, 20வது வார்டில் அமைந்துள்ளது, அமிர்தாபுரம். இப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சாலை வசதியில்லாமல் முட்புதரில் நடந்து செல்கின்றனர். மேலும், கழிவுநீர் கால்வாய் இல்லாமல், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்தான செய்தி, படத்துடன் தினமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கு மாணவர்கள் செல்வதற்கு பாதை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும், சிமெண்ட் சாலையாகவும், கழிவுநீர் கால்வாய் கட்டி, சுகாதாரமாக வைத்திருக்கவும், நகர்மன்ற தலைவர் உறுதி கொடுத்து உள்ளார்.
