சவுடேஸ்வரி வித்யாலயத்தில் மாநில அளவிலான யோகாசனப் போட்டி
சவுடேஸ்வரி வித்யாலயத்தில் மாநில அளவிலான யோகாசனப் போட்டி
UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM
ADDED : ஜூலை 30, 2014 02:03 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: கோவை சொக்கம்புதுாரில் உள்ள சவுடேஸ்வரி வித்யாலயத்தில் மாநில அளவிலான யோகாசனப் போட்டியை கோவை காந்திபார்க் யோகாசன சங்கம் நடத்தியது.
நாடு முழுவதும் உள்ள 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், ஏ பிரிவு போட்டியில் நரசிம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவி லுாயிஸ்மேரி முதலிடமும், பி பிரிவு போட்டியில், இதே பள்ளியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி பூரணி மூன்றாவது இடமும், நர்மதா நான்காம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர் கல்பனா, யோகா மாஸ்டர் அப்துல் அஜிஸ், உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்தினர்.
