தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வனக் கல்லூரி மாணவியர் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்

வனக் கல்லூரி மாணவியர் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்

வனக் கல்லூரி மாணவியர் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்


UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM

ADDED : ஜூலை 30, 2014 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM ADDED : ஜூலை 30, 2014 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: வனம் சார்ந்த காலிப் பணியிடங்களை வனவியல் பட்டதாரிகளை கொண்டு நிரப்ப வலியுறுத்தி, வனக் கல்லூரி மாணவியர், மண் சோறு சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் வனவியல் பட்டதாரிகளை, வனச்சரகர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் எனக்கோரி, கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிய அரசாணையை மாற்றம் செய்து, 100 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வருகின்றனர். எட்டாவது நாளாக நேற்று மாணவியர், மண் சோறு சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம், தமிழ்நாடு வனவியல் தோட்டக்கழகம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் போன்ற வனம் சார்ந்த காலிப்பணியிடங்களை வனவியல் பட்டதாரிகளை கொண்டு நிரப்ப வேண்டும்; அனைத்து மாவட்டங்களிலும், வனவிரிவாக்க அலுவலர் பணியிடங்களை உருவாக்கி, அப்பணியிடங்களை வனவியல் பட்டதாரிகளை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள், கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us