தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்பறை போதாமல் மரத்தடியில் பாடம் படிக்கும் கல்லூரி மாணவிகள்

வகுப்பறை போதாமல் மரத்தடியில் பாடம் படிக்கும் கல்லூரி மாணவிகள்

வகுப்பறை போதாமல் மரத்தடியில் பாடம் படிக்கும் கல்லூரி மாணவிகள்


UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM

ADDED : ஜூலை 31, 2014 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM ADDED : ஜூலை 31, 2014 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் போதிய வகுப்பறை கட்டடங்கள் இன்றி, மரத்தடியில் பாடமெடுக்கும் நிலை உள்ளது.

சிவகங்கை காஞ்சிரங்கால் ஊராட்சியில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 3 முதுநிலை,10 இளநிலை பாடப்பிரிவு செயல்படுகின்றன.

மனையியல், பி.காம், பி.பி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடபிரிவுகளில் மதிய ஷிப்ட் வகுப்பு நடக்கிறது. மாணவர்களின் ஆர்வம் கருதி, இவ்வாண்டு பி.காம், பி.பி.ஏ., இயற்பியல், வேதியியல் கம்ப்யூட்டர் சயின்ஸ், தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அழகப்பா பல்கலை மூலம் கூடுதல் இடங்களை முதல்வர் கோமதி கேட்டு, பெற்று முதலாமாண்டு அட்மிஷன் வழங்கியுள்ளார்.

முதுநிலை, இளநிலை என, 1800க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு போதிய வகுப்பறை வசதி இல்லை. இதன் காரணமாக மேலும், சில பாடப்பிரிவிற்கு கூடுதல் இடங்களை பெறும் முயற்சி தவிர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் வகுப்பறை கட்டடங்களை கேட்டு, எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்களுக்கு பலமுறை கல்லூரி நிர்வாகம் கோரிக்கை வைத்தும், கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

தற்போதைய நிலவரப்படி 15க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் தேவை இருக்கிறது. இல்லாத பட்சத்தில் சில வகுப்புகளுக்கு மரத்தடியில் பாடமெடுத்து சமாளிப்பதாக, கல்லூரி நிர்வாகத்தினர்,பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள், தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இக்கல்லூரிக்கு தேவையான வகுப்பறை கட்டடங்களை ஏற்படுத்த முன் வராதது ஏன்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us