சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனத்திற்கு தடைவிதித்த உயர்நீதிமன்றம்
சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனத்திற்கு தடைவிதித்த உயர்நீதிமன்றம்
UPDATED : ஆக 01, 2014 12:00 AM
ADDED : ஆக 01, 2014 12:12 PM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்களாக, பேராசிரியர்கள் இருவரை துணைவேந்தர் நியமனம் செய்த உத்தரவிற்கு ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
மதுரை காமராஜ் பல்கலை இணைப் பேராசிரியர் மேஷாக் பொன்ராஜ் தாக்கல் செய்த மனு: நான், 1987 ல் பணியில் சேர்ந்தேன். தற்போது தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிகிறேன். மரபணு மற்றும் உயிரியல் அறிவியல் புலம் இணைப் பேராசிரியர் குமரேசன். இவர், 2010 ல் பணியில் சேர்ந்தார். பல்கலை விதியின்படி, சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில், பணிமூப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
குமரவேல் என்னைவிட பணியில் இளையவர். இவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்து, துணைவேந்தர் ஜூலை 10ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சிண்டிகேட் உறுப்பினர்கள் ஏழு பேர் பல்கலை வேந்தரிடம் (கவர்னர்) மனு அளித்தனர். பல்கலை ஆசிரியர் சங்கமும், புகார் செய்தது. சிண்டிகேட் கூட்டம் ஆக.,1 ல் நடக்கும் என பதிவாளர் அறிவித்துள்ளார். குமரேசன் நியமனத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிண்டிகேட் கூட்டத்தில் குமரேசன் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். அவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்த, துணைவேந்தரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பல்கலை உதவி பேராசிரியர் சதாசிவம் தாக்கல் செய்த மனுவில், &'&'1996 ல் பணியில் சேர்ந்தேன். நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியர் வித்யாசெல்லம். இவர் 2013 டிசம்பரில் பணி நியமனம் செய்யப்பட்டார். இவரை சிண்டிகேட் உறுப்பினராக துணைவேந்தர் நியமித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்,&'&' என தனியாக மனு செய்தார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். குமரேசன், வித்யாசெல்லத்தை சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமனம் செய்த துணைவேந்தர் உத்தரவிற்கு, நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி ஆக.,25 க்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
