டான்செட் முதல் மாணவர் சென்னைப் பல்கலையை தேர்வு செய்தார்!
டான்செட் முதல் மாணவர் சென்னைப் பல்கலையை தேர்வு செய்தார்!
UPDATED : ஆக 01, 2014 12:00 AM
ADDED : ஆக 01, 2014 12:51 PM
கோவை: எம்.பி.ஏ., படிப்புக்கான டான்செட் நுழைவுத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவர் ஸ்ரீராம் சென்னை பல்கலையில் எம்.பி.ஏ., (நிதி) பயில விருப்பம் தெரிவித்து, அதற்கான உத்தரவை பெற்றார்.
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில் சென்னை வள்ளியம்மை இன்ஜி., கல்லூரியில் படித்த ஸ்ரீராம், எம்.பி.ஏ., டான்செட் நுழைவுத் தேர்வில் (64 மதிப்பெண்) பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்தார்.
இவர், கவுன்சிலிங்கில் பங்கேற்று சென்னை பல்கலையில் எம்.பி.ஏ., (நிதி) படிப்பை தேர்வு செய்தார். இவருக்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் லட்சுமிபிரபா வழங்கினார். மாணவர் ஸ்ரீராம் கூறுகையில், "எனது தந்தை அளித்த தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டு படித்து டான்செட்டில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றேன். எம்.பி.ஏ., (நிதி) படிப்பை தேர்வு செய்துள்ளேன்" என்றார்.
