தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறி

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறி

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறி


UPDATED : ஆக 02, 2014 12:00 AM

ADDED : ஆக 02, 2014 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2014 12:00 AM ADDED : ஆக 02, 2014 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சீரமைக்கப்படாத கட்டடத்தால், மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், இந்த கல்வியாண்டில் 589 மாணவியர் படித்து வருகின்றனர். வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளைச்சேர்ந்த மாணவியர் இங்கு படிக்கின்றனர்.

பள்ளியில் போதிய வகுப்பறைகள் இருந்தும், பெரும்பாலான வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாலும், வகுப்பறைகளுக்கு கதவு, ஜன்னல் இல்லாததாலும், பாதுகாப்பற்ற நிலையில் மாணவியர் படித்து வருகின்றனர்.

மேலும் பள்ளியின் பின்புறம் உள்ள வழி மூடப்படாத நிலையில், கடந்த மாதம் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தில் புகுந்து, மாணவியரை விரட்டியுள்ளனர். பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான வகுப்பறைகள் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இதனால், இந்த கட்டடம் வலுவிழந்து, வகுப்பறைகளை மாணவியர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பள்ளியைச் சுற்றிலும் முட்புதர்கள் அதிக அளவில் காணப்படுவதால், பகல் நேரத்திலேயே பாம்புகள் பள்ளி வகுப்பறைக்குள் படமெடுக்கின்றன.
பழுதடைந்துள்ள வகுப்பறைகளை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும் என்பது மாணவியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சனிடம் கேட்டபோது, "பழுதடைந்த பள்ளியின் மேற்கூரை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மழையினால், இந்தப்பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மழை காலத்திற்கு பின்னர் வகுப்பறையில் பழுதடைந்துள்ள கதவு, ஜன்னல்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us