தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி


UPDATED : ஆக 04, 2014 12:00 AM

ADDED : ஆக 04, 2014 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2014 12:00 AM ADDED : ஆக 04, 2014 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடந்தது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு நீச்சல் சங்க துணை தலைவர் வைத்தீஸ்வரன் கொடியசைத்து, போட்டியை துவக்கி வைத்தார். மாவட்ட நீச்சல் சங்க தலைவர் சிகாமணி முன்னிலை வகித்தார்.

அதனை தொடர்ந்து 50, 100, 200 மீட்டர் பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் நடந்தது. இதில் 6 முதல் 17 வயதிற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்க துணை தலைவர் வைத்தீஸ்வரன் மற்றும் கனிமொழி ஆகியோர் தங்க கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கினர். ஏற்பாடுகளை நீச்சல் பயிற்சியாளர்கள் அருணா, லதா ஆகியோர் செய்திருந்தனர். செயலாளர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us