தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடும்பரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி

குடும்பரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி

குடும்பரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி


UPDATED : ஆக 05, 2014 12:00 AM

ADDED : ஆக 05, 2014 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2014 12:00 AM ADDED : ஆக 05, 2014 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: குடும்பரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சமூக பாதுகாப்புத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக, 41 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

தாய் மற்றும் தந்தை இல்லாத குழந்தைகள், தாய் அல்லது தந்தை மட்டும் உள்ள குழந்தைகள் மற்றும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், பொருளாதாரம் மற்றும் குடும்ப ரீதியாக பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

அவர்களுடைய பாதிப்பை சமாளிக்க ஏதுவாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலமாக, தலா 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் அத்தொகையை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் பாதிக்கப்பட்ட 41 மாணவ, மாணவியருக்கு, தலா 1,000 ரூபாய்க்கான காசோலைகளை கலெக்டர் கோவிந்த ராஜ் வழங்கினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us