மருத்துவப் படிப்பிற்கு மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடத்த வலியுறுத்தல்
மருத்துவப் படிப்பிற்கு மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடத்த வலியுறுத்தல்
UPDATED : ஆக 05, 2014 12:00 AM
ADDED : ஆக 05, 2014 01:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மருத்துவப் படிப்பிற்கு மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்பிற்கு இரண்டு கட்டங்களாக கடந்தாய்வு நடத்தப்பட்டது. மாணவர்கள், ஜூலை 30ம் தேதிக்குள் சேர்க்கை பெற்றனர். தற்போது, 22 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பாமல் உள்ளது.
அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள, 23 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அடுத்த மாதம் 9ம் தேதி வரை சேர்க்கை நடத்த அவகாசம் உள்ளது. எனவே, மருத்துவப் படிப்பிற்கு, அதற்குள் மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
