UPDATED : ஆக 05, 2014 12:00 AM
ADDED : ஆக 05, 2014 02:31 PM
சோழிங்கநல்லுார்: சென்னையில் நடந்து வரும், மாநில அளவிலான கபடி போட்டியில், விருகம்பாக்கம் அரசு பள்ளி அணி 40-12 என்ற புள்ளி கணக்கில், ஜெனரல் கரியப்பா அணியை வீழ்த்தியது.
செயின்ட் ஜோசப்ஸ் கல்வி குழுமம் சார்பில், பள்ளி அணிகள் பங்கேற்கும், மாநில அளவிலான, 25வது, ட்ரோம்ப் விளையாட்டு போட்டிகள், சோழிங்கநல்லுார், செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் இருந்து, 78 பள்ளி அணிகள் பங்கேற்று உள்ளன. போட்டிகள், லீக், நாக்-அவுட் முறையில் நடந்து வருகின்றன.
வாலிபால்: ஆண்கள் பிரிவில், செயின்ட் சேவியர் அணி, வேலம்மாள் அணியை வீழ்த்தியது. வேல் பள்ளி அணி, டான்பாஸ்கோ அணியை வென்றது. பெண்கள் பிரிவில், சிவசாமி அணி, அரசு பள்ளி (சின்னதடாகம்) அணியை வீழ்த்தியது. செயின்ட் மேரீஸ் அணி, செயின்ட் ஜான்ஸ் பாஸ்கோ அணியை வென்றது.
பூப்பந்து: ஆண்களில், டி.ஏ., பள்ளி அணி, எம்.சிடி.எம்., பள்ளி அணியை வீழ்த்தியது. வேல் பள்ளி அணி, எஸ்.ஆர்.கே.எம்., அணியையும், ஆர்.கே.எம்., அணி, கே.எஸ்.ஓ., அணியையும் வென்றன. பெண்களில், செயின்ட் தெரசா அணி, செயின்ட் ரபேல்ஸ் அணியை தோற்கடித்தது.
கூடைபந்து: ஆண்களில், பீட்டர்ஸ் அணி, கோகுல்நாத் அணியையும், வேலம்மாள் அணி, சாந்தோம் அணியையும் வீழ்த்தின. பெண்களில், சாந்தோம் அணி, ஸ்ரீ சாரதா அணியை தோற்கடித்தது.
கபடி: ஆண்களில், செயின்ட் ஜோசப்ஸ் (கடலுார்), ஜெனரல் கரியப்பாவை வென்றது. விருகம்பாக்கம் அரசு பள்ளி அணி, ஜெனரல் கரியப்பா அணியை வீழ்த்தியது.
கால்பந்து: ராணி சீதை ஆச்சி அணி, கிருஷ்ணகிரி விளையாட்டு விடுதி அணியை வென்றது. மதுரை விளையாட்டு விடுதி அணி, திருச்சி விளையாட்டு விடுதி அணியை வென்றது.
