இலக்கியங்களின் செயல்பாடு மங்கி வருகிறது: பிரான்ஸ் எழுத்தாளர் கலாமோகன்
இலக்கியங்களின் செயல்பாடு மங்கி வருகிறது: பிரான்ஸ் எழுத்தாளர் கலாமோகன்
UPDATED : ஆக 06, 2014 12:00 AM
ADDED : ஆக 06, 2014 10:47 AM
திண்டுக்கல்: "இலக்கியங்களின் செயல்பாடு தற்போது மங்கி வருகிறது" என பிரான்ஸ் சிறுகதை எழுத்தாளர் கலாமோகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
காந்திகிராமம் பல்கலை தமிழ்த்துறை பாரதியார் ஆய்வகம் சார்பில், பிரான்ஸ் நாட்டில் தமிழ் படைப்புலகம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பிச்சை தலைமை வகித்தார். பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார்.
பிரான்ஸ் நாட்டின் சிறுகதை எழுத்தாளர் கலாமோகன் பேசியதாவது: பிரான்ஸ் அகதிகளின் நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு, சொந்த நாட்டு மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் அகதிகளுக்கும் கிடைக்கின்றன. அகதிகளுக்கு மிகுந்த மரியாதை தரப்படுகிறது. பேச்சு, எழுத்துரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, இலங்கை பெண்கள் ஏராளமான கதை, கவிதைகளை எழுதியுள்ளனர்.
அகதிகளாக பிரான்ஸ் சென்ற தமிழர்கள் பல தரப்பட்ட பணிகளை செய்தனர். அப்போது, வாழ்க்கை பற்றிய புதிய பார்வை அவர்களுக்கு தோன்றியது. இதையே அவர்கள் கவிதை, கதைகளாக எழுதியுள்ளனர். கடந்த 1990 ல், இலக்கியத்தின் புகழ் உச்சகட்டத்தில் இருந்தது.
தற்போது, இலக்கியத்தின் செயல்பாடு மங்கி வருகிறது. நான் தமிழ் கதைகளை எழுதினாலும், அதில் ஆப்ரிக்கா, அல்ஜீரியா, பிரான்ஸ் நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை எடுத்து கூறியுள்ளேன் என்றார்.
