களப்பணியில் ஈடுபட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்லூரி மாணவியர்
களப்பணியில் ஈடுபட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்லூரி மாணவியர்
UPDATED : ஆக 06, 2014 12:00 AM
ADDED : ஆக 06, 2014 02:31 PM
கோபிசெட்டிபாளையம்: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்லூரி மாணவியர், செம்மை கருப்பு சாகுபடி குறித்து, கோபி பகுதியில் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபியில், கோபி வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், மூன்று மாத காலம் தங்கி, செயல் விளக்கப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஊரான் வேளாண் பணி அனுபவ திட்டத்தின் மூலம், கரும்பு, வாழை, மஞ்சள் மற்றும் நெற்பயிர்களில், நோய்கள் தாக்குதல் மற்றும் சாகுபடி முறை குறித்து களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தவிரவும், செம்மை நெல் சாகுபடி, செம்மை கரும்பு சாகுபடி, அடர் வாழை சாகுபடி முறை, நுண்ணுயிர் பாசன முறை, மண் மாதிரி எடுத்தல் ஆகியவற்றின் செயல்விளக்கத்தை, விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். மேலும், கோபி அருகே குருமந்தூரில் வடிவேல் என்பவரது விவசாய நிலத்தில், செம்மை கரும்பு சாகுபடி செய்யும் முறை குறித்து, செயல்விளக்கம் காண்பித்தனர்.
விவசாயி வடிவேல் கூறுகையில், "செம்மை கரும்பு சாகுபடி முறையில், பயிர் செய்ய ஏக்கருக்கு, 6,000 கரும்பு நாற்றுகள் தே வைப்படும். நாற்று ஒன்று, 1.50 ரூபாய் செலவாகிறது. இரண்டுக்கு, நான்கு அடி என்ற விகிதத்தில், இடைவெளியில் சாகுபடி செய்யும் போது, 30 சதவீதம் மகசூல் கிடைக்கிற து. தண்ணீரும் மிகக்குறைந்த அளவில் செலவாகும். வேளாண் கல்லூரி மாணவியர்கள், மேற்கொண்டுள்ள முறைகள் மற்றும் சாகுபடி முறைகள் விளக்கம் அளித்ததும், மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது" என்றார்.
