தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு கடின உழைப்பு, ஒழுக்கம், குணம் முக்கியம்

மாணவர்களுக்கு கடின உழைப்பு, ஒழுக்கம், குணம் முக்கியம்

மாணவர்களுக்கு கடின உழைப்பு, ஒழுக்கம், குணம் முக்கியம்


UPDATED : ஆக 06, 2014 12:00 AM

ADDED : ஆக 06, 2014 02:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2014 12:00 AM ADDED : ஆக 06, 2014 02:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: "மாணவர்களுக்கு கடின உழைப்பு, ஒழுக்கம், குணம் முக்கியமானதாக இருக்க வேண்டும்" என சென்னை ஐ.ஐ.டி., யின் முன்னாள் இயக்குனர் ஆனந்த் கூறினார்.

ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த, முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இன்ஜினியரிங் மாணவர்கள் அடிப்படையை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதனுடன் கல்வியும் சேரும்போது, புதிய கண்டுபிடிப்புகள் வரும். நவீன தொழில்நுட்பம் குறித்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒழுக்கத்துடன், குணமும் முக்கியம். புரிந்துகொண்டு படிக்க வேண்டும். முதலாம் ஆண்டு படித்ததை மூன்றாம் ஆண்டில் மறக்ககூடாது. முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.

நேர்முகமான பார்வை வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும், குறுக்கு வழியை தேடக்கூடாது. போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும்,&'&' என்றார்.கல்லூரி சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, "கல்லூரியில் உள்ள நூலகம், ஆய்வகம் மற்றும் நவீனவசதிகளை பயன்படுத்தி, மாணவர்கள் அறிவை வளர்க்க வேண்டும். புரிந்து படித்து, நல்ல இன்ஜினியர்களாக வரவேண்டும்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us