தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுகலை ஆசிரியர் தேர்வு - மாற்றியமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வு - மாற்றியமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வு - மாற்றியமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு


UPDATED : ஆக 07, 2014 12:00 AM

ADDED : ஆக 07, 2014 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2014 12:00 AM ADDED : ஆக 07, 2014 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் நியமிக்கும் பணி, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் பணி நியமனம் நடந்துள்ளது. உடற்கல்வி இயக்குனர், மைக்ரோ - பயாலஜி, புவியியல், விலங்கியல், பயோ - கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வு விடைகளில், சில மாற்றங்களை டி.ஆர்.பி., செய்தது.

அதனடிப்படையில், புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது.

இந்த மூன்று பாடங்களில் ஏற்கனவே, 259 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக, 49 பேர், பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு, வரும் 14ம் தேதி, விழுப்புரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us