விரைவில் நவீன வசதிகளை உள்ளடக்கிய விண்வெளி வான் ஆய்வுக்கூடம்!
விரைவில் நவீன வசதிகளை உள்ளடக்கிய விண்வெளி வான் ஆய்வுக்கூடம்!
UPDATED : ஆக 09, 2014 12:00 AM
ADDED : ஆக 09, 2014 03:52 PM
சென்னை: சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், நவீன வசதிகளை உள்ளடக்கிய விண்வெளி வான் ஆய்வுக்கூடம் விரைவில் அமைய உள்ளது. இதற்காக, 40 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நகரும் வகையில் குவிந்த அமைப்புடன் கூடிய, கூரையுடன் கூடிய, அந்த விண்வெளி வான் ஆய்வுக் கூடத்தில், நவீன தொலை நோக்கிகள், பிம்பங்களை பெறும் கருவிகள், பகுப்பாய்வு கருவிகள் பொருத்தப்படும். இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய, செயல் இயக்குனர் அய்யம் பெருமாள் கூறியதாவது:
இந்த மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன. இரவில், விண்மீன்கள், கோள்கள் இவற்றை ஆய்வு செய்ய முடியும். குறிப்பாக, பகலில், சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு இந்த ஆய்வுக்கூடத்தில், கருவிகள் பொருத்தப்படுகின்றன.
சூரியனின் நகர்விற்கேற்ப, இந்த கூடத்தின் கூரையும் நகரும் வகையில், அமைக்கப்படுகிறது. கோள்கள், சந்திரன், சிறுஅண்டங்கள் உள்ளிட்ட விண் பொருட்களை, இதன்மூலம், பொதுமக்கள் பாதுகாப்பாக பார்வையிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
