அரசு கல்லூரியாக மாற்ற வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
அரசு கல்லூரியாக மாற்ற வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
UPDATED : ஆக 09, 2014 12:00 AM
ADDED : ஆக 09, 2014 05:19 PM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு, சி.என்.கல்லூரியை, அரசு கல்லூரியாக மாற்ற வலியுறுத்தி மாணவ, மாணவியர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.
சி.என்.கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு அமைப்பினர், கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில், காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டு, வரும் 11ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்திய மாணவர் சங்க கிளைத்தலைவர் அருள் பிலிப் தலைமையில், மாணவ, மாணவியர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.
