14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான 2 நாள் கூடைப்பந்து போட்டி
14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான 2 நாள் கூடைப்பந்து போட்டி
UPDATED : ஆக 09, 2014 12:00 AM
ADDED : ஆக 09, 2014 05:31 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி லயன்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான இரண்டு நாள் கூடைப்பந்து போட்டி நடந்தது.
18 பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. மாணவிகளுக்கான போட்டியில், சிவகாசி வி.எஸ்.கே.டி., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், சிவகாசி லயன்ஸ் மெட்ரிக்., பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது. மாணவர்களுக்கான போட்டியில் விருதுநகர் டி.வி.எஸ்.., நடுநிலைப்பள்ளி முதலிடத்தையும், சிவகாசி செண்பக விநாயகர் மெட்ரிக்., பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு லயன்ஸ் கிளப் நிர்வாகி பிரபாகர் கேடயம், சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
