தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு

பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு

பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு


UPDATED : ஆக 11, 2014 12:00 AM

ADDED : ஆக 12, 2014 03:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2014 12:00 AM ADDED : ஆக 12, 2014 03:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகள் அளவில், காலியாக இருந்த, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தமிழ் பாடத்திற்கான இறுதி தேர்வு பட்டியல், பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டு, பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன.

இந்நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட, பாடங்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள், ஜனவரியில் வெளியிடப்பட்டன. இதில், சிக்கல்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டதால், முதுகலை ஆசிரியர் நியமனம் தாமதமாகியது.

கோர்ட்டில், சமீபத்தில், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளாதார பாடங்கள் தொடர்பான உத்தரவு வெளியானது. இந்த உத்தரவின்படி, ஆசிரியர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், எஞ்சியுள்ள ஆங்கிலம், கணிதம், தாவரவியல், உயிரியல், நுண் உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில், 1,326 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, தகுதியானவர்கள் பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டது.

பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் பட்டியலை, கடந்த மாதம், 14ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த 10,726 பேரது பட்டியல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், 10,726 பேருக்கான தேர்வுப்பட்டியலையும், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியல், சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மாத இறுதிக்குள், இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள்

இவர்கள் தவிர, இடை நிலை ஆசிரியர்கள் 4,000 பேருக்கான இறுதிப்பட்டியலும், இந்த மாத இறுதிக்குள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us