தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனுமதி பெறாத இரண்டு தனியார் கல்லூரி கட்டடங்களுக்கு சீல்

அனுமதி பெறாத இரண்டு தனியார் கல்லூரி கட்டடங்களுக்கு சீல்

அனுமதி பெறாத இரண்டு தனியார் கல்லூரி கட்டடங்களுக்கு சீல்


UPDATED : ஆக 13, 2014 12:00 AM

ADDED : ஆக 13, 2014 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2014 12:00 AM ADDED : ஆக 13, 2014 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: உள்ளூர் திட்ட குழுமத்தில் அனுமதி பெறாத, இரண்டு தனியார் கல்லூரி கட்டடங்கள், பூட்டி, சீல் வைக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 31 கிராம பகுதிக்குள் கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் மனைப்பிரிவுகளுக்கு, உள்ளூர் திட்ட குழும அனுமதி பெற வேண்டும். ஆனால், 52 தனியார் கல்வி நிறுவனங்கள் இதுவரை அனுமதி பெறவில்லை.

திட்ட அனுமதி பெற, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு, உள்ளூர் திட்டக் குழுமத்தின் சார்பில், பலமுறை தகவல் அனுப்பியும், அந்த கல்வி நிறுவனங்கள் முறையாக விண்ணப்பிக்கவில்லை. அதனால் அனுமதி பெறாத கல்வி நிறுவனங்களை, சீல் வைக்கும் நடவடிக்கையை உள்ளூர் திட்ட குழுமத்தினர் துவக்கியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அடுத்த, பிள்ளையார்பட்டி சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாஞ்சிக்கோட்டை, பரிசுத்தம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில், திட்டக் குழும அதிகாரிகள், திடீரென்று சோதனையிட்டனர். இரு கல்லூரிகளிலும் உள்ள முதல்வர் அறை மற்றும் நிர்வாக அலுவலக அறைகளை அதிகாரிகள் பூட்டி, சீல் வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us