தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆகஸ்ட் 13 - தேதி சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம்

ஆகஸ்ட் 13 - தேதி சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம்

ஆகஸ்ட் 13 - தேதி சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம்


UPDATED : ஆக 13, 2014 12:00 AM

ADDED : ஆக 13, 2014 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2014 12:00 AM ADDED : ஆக 13, 2014 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகின் மொத்த மக்கள் தொகையில், 7 முதல் 10 சதவீதம் பேர் இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.

இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறான பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆக.13ம் தேதி சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முதன்முதலில் 1976ம் ஆண்டு சர்வதேச இடதுகை அமைப்பு அறிவித்தது.

இடதை வரவேற்போம்: இடது கை பழக்கம் என்பது இயற்கையிலே ஒருவருக்கு அமைந்து விடுகிறது. மூளை வளர்ச்சியை பொறுத்து இது அமைகிறது. குழந்தைகள் இடது கைப்பழக்கம் உடையவர்கள் என தெரிந்தால், அவர்களை வலது கை பழக்கதுக்கு மாற்ற பெற்றோர்கள் முயற்சிப்பர். இது தவறானது. அப்படி மாற்றுவதால் குழந்தைகளில் பேச்சு மற்றும் பார்வையில் குறைபாடு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக மக்கள் தொகையில் வலது கை பழக்கம் உடையவர்களே அதிகம் உள்ளனர். இதனால் கார், கம்ப்யூட்டர், பாத்ரூம் குழாய் என அனைத்து தொழில்நுட்ப பொருட்களும் இவர்களுக்கு ஏற்றவறே தயாரிக்கப்படுகின்றன. இதனால் இத்தகைய பொருட்களை பயன்படுத்தும்போது, இடது கை பழக்கம் உள்ளவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இவர்களுக்கு தகுந்தவாறும் பொருட்களை நிறுவனங்களும், அரசும் அமைத்து தர வேண்டும் என்று இத்தினம் வலியுறுத்துகிறது.

மேலும் இவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், கிளின்டன், புஷ், ஒபாமா ஆகிய பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us