தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீச்சல் போட்டிகளில் அசத்தும் சிவகங்கை பள்ளி மாணவர்கள்!

நீச்சல் போட்டிகளில் அசத்தும் சிவகங்கை பள்ளி மாணவர்கள்!

நீச்சல் போட்டிகளில் அசத்தும் சிவகங்கை பள்ளி மாணவர்கள்!


UPDATED : ஆக 13, 2014 12:00 AM

ADDED : ஆக 13, 2014 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2014 12:00 AM ADDED : ஆக 13, 2014 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி, 8ம் வகுப்பு மாணவி சி.யாழ்நி, 9ம் வகுப்பு மாணவர் கே.சரத்.

இருவரும் நீச்சலில் கை தேர்ந்தவர்கள். சிவகங்கை, அரசு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற இருவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சார்பில் மட்டுமின்றி, மாவட்ட, மாநில போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்று வருகின்றனர். ஆக.,6 முதல் 8 வரை, சென்னையில், தமிழகம், புதுச்சேரி மாநில கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கான 19 வயதிற்குட்பட்டோர் பிரிவுக்கான நீச்சல் போட்டி நடத்தப்பட்டது. இதில் 44 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.  சிவகங்கை, கேந்திரியா வித்யாலயா பள்ளி சார்பில், நீச்சல் போட்டியில், மாணவி சி.யாழ்நி, கே.சரத் பங்கேற்றனர்.

பதக்கம்: 400 மற்றும் 200 மீட்டர் ஆகிய இரண்டு ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று, தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களையும், 100 மீட்டர் பிரஸ்டோக் நீச்சலில், 2ம் பரிசான வெள்ளி பதக்கம் ஆகிய 3 பரிசுகளை, மாணவி சி.யாழ்நி பெற்றார். 100 மீட்டர், பட்டர்பிளை நீச்சலில் 3ம் பரிசான வெண்கல பதக்கத்தை இப்பள்ளி மாணவர் கே.சரத் பெற்றார்.

சிவகங்கை கேந்திரியா வித்யாலயா பள்ளி சி.யாழ்னி, கே.சரத் கூறும்போது, "எங்களை போன்ற மாணவர்களை கண்டறிந்து, கேந்திரியா வித்யாலயா சங்கதன் ஊக்கப்படுத்துகிறது. போட்டிகளுக்கு சென்று வருதல், பயிற்சி பெறுதல் போன்ற அனைத்து செலவுகளையும் பள்ளியே ஏற்பதால், எங்கள் திறமையை வெளியே கொண்டுவர பொருளாதாரம் ஒரு தடையாக இல்லை.

நீச்சலில் தேசிய அளவில் முதல் 2 இடங்களை பிடித்தால்தான், இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் (school Games Fedaration of India) நடத்தும் போட்டிகளில் பங்கேற்க முடியும். அதில், பங்கேற்று பதக்கம் பெறுவது தான் நோக்கம்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us