தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கு கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு

தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கு கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு

தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கு கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு


UPDATED : ஆக 13, 2014 12:00 AM

ADDED : ஆக 13, 2014 12:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2014 12:00 AM ADDED : ஆக 13, 2014 12:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கு கட்டடம் கட்ட, தமிழக அரசு இடம் ஒதுக்கீடு செய்துள்ளது என, துணைவேந்தர் வீணை காயத்ரி தெரிவித்தார்.

திருச்சி, எஸ்.ஆர்.சி., மகளிர் கல்லூரியில் நடந்த இசை மற்றும் யோகா குறித்த கருத்தரங்கு துவக்க விழாவில், வீணை காயத்ரி கூறியதாவது: தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்குள், எட்டு இசைக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. பல்கலை, சென்னை அடையாறில் உள்ள இசைக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கு புதிய கட்டடம் கட்ட, சென்னை சோழிங்கநல்லூரில், 31 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பல்கலையில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், தவில், நாதஸ்வரம், புல்லாங்குழல், பரதநாட்டியம் ஆகிய பாடப்பிரிவுகள், முதுநிலை படிப்பாக கற்று தரப்படுகிறது.

மேலும், போட்டோகிராபி, விஷுவல் கம்யூனிகேஷன் சான்று படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன. தற்போது 40 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு துறையிலும், உதவி பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சிறப்பு பேராசிரியர்களும் வகுப்பு நடத்துகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us