தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை கல்லூரி மாணவர்கள் கண்காணிப்பு விஷயத்தில் உளவுத்துறை மெத்தனம்

சென்னை கல்லூரி மாணவர்கள் கண்காணிப்பு விஷயத்தில் உளவுத்துறை மெத்தனம்

சென்னை கல்லூரி மாணவர்கள் கண்காணிப்பு விஷயத்தில் உளவுத்துறை மெத்தனம்


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர்கள் குமுறல்

சென்னையில், அரசு கல்லுாரி மாணவர்கள், பேருந்து வழித்தடத்தில் ஏற்படும் பிரச்னையை காரணம் காட்டி, அரிவாளால் வெட்டிக் கொள்கின்றனர். கடந்த மாதங்களில், பேருந்துகளில், பயணிகளையும், அரிவாளால் கொடூரமாக தாக்கினர். இதையடுத்து, பிரச்னைக்குரிய கல்லுாரி முதல்வர்களை நேரில் அழைத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒரு பெண் கல்லுாரி முதல்வர், "மாணவன் கஞ்சா கொண்டு வந்து வினியோகிக்கிறான். கண்டித்தால், அரிவாளை எடுத்து காட்டுகிறான்" என உள்ளம் குமுறினார். அதனால், கல்லுாரி மாணவர்களை கண்காணிப்பதற்கு என்றே உளவு போலீசார் நியமிக்கப்பட்டனர். மேலும், ஒழுங்கீனமான மாணவர்களை வீடியோவில் பதிவுசெய்து, பெற்றோரிடம் போட்டு காண்பிக்கப்படும் என போலீசார் அறிவித்து இருந்தனர்.

பிரச்னைக்குரிய கல்லுாரி மாணவர்கள் பயணிக்கும் பேருந்துகளில் போலீசார் பயணிப்பர். அவர்கள் ஒன்றுகூடும் இடங்களில், போலீசார் நிறுத்தப்படுவர் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது. அதுவெல்லாம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இந்த நிலையில்தான், பச்சையப்பன் கல்லுாரி வளாகத்தில், மூன்றாம் ஆண்டு மாணவர் சதீஷ், சக மாணவர்களால் வெட்டப்பட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டிய, கல்லுாரிகளுக்கு என நியமிக்கப்பட்ட உளவு போலீசார், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால், மாணவர்களின் கொலைவெறி தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

162 பேர் கைது

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளில், மாணவர்களின் மோதல் சம்பவங்கள் தொடர்பாக 82 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒருவருக்கு டி.சி., கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 162 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு 89 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us