தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/4 ஆண்டு இளநிலைப் படிப்பை வழங்க அனுமதி பெற்றது ஐ.ஐ.எஸ்சி.,

4 ஆண்டு இளநிலைப் படிப்பை வழங்க அனுமதி பெற்றது ஐ.ஐ.எஸ்சி.,

4 ஆண்டு இளநிலைப் படிப்பை வழங்க அனுமதி பெற்றது ஐ.ஐ.எஸ்சி.,


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூர்: பெங்களூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரசு கல்வி நிறுவனமான இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்(IISc), தான் வழங்கும் 4 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பை தொடர்ந்து மேற்கொள்வதற்கான அனுமதியை பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெற்றுள்ளது.

IISc தரப்பில் இதுகுறித்து அனுப்பப்பட்ட விளக்கத்தை ஏற்று, இந்த அனுமதியை UGC வழங்கியுள்ளது. சமீபத்தில், 4 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகள் குறித்து நாட்டில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, IISc உள்ளிட்ட மூன்று கல்வி நிறுவனங்கள் வழங்கும் 4 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பை நிறுத்தி வைக்குமாறு UGC கேட்டுக்கொண்டது.

ஆனால், அப்படிப்பு குறித்து IISc தரப்பில் UGC -க்கு தெளிவான விளக்கம் அனுப்பப்பட்டது. இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, 3 ஆண்டுகள் முடிவிலேயே பட்டம் வழங்கப்பட்டுவிடும் என்றும், எஞ்சியுள்ள ஒரு ஆண்டு, ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக என்றும் விளக்கம் தரப்பட்டது.

இதனையடுத்து, 4 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பை, IISc தொடர்ந்து வழங்கிக் கொள்ளலாம் என்று UGC அனுமதியளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us