தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா மற்றும் பாராட்டு விழா

மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா மற்றும் பாராட்டு விழா

மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா மற்றும் பாராட்டு விழா


UPDATED : ஆக 16, 2014 12:00 AM

ADDED : ஆக 16, 2014 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2014 12:00 AM ADDED : ஆக 16, 2014 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தியாகதுருகம்: மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா மற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவில் தாளாளர் மணிமாறன் தேசிய கொடியேற்றி பேசினார். மாணவர்களின் கொடி அணிவகுப்பு, மாணவர்கள் பங்கேற்ற பேச்சு, மாறு வேடப் போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி மணிபாரதி, இரண்டாம் இடம் பெற்ற மாணவர் வாசுதேவன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம் பெற்ற மாணவி அபிநயா விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

இப்பள்ளியில் படித்து கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இவ்வாண்டு, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற 31 மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய் மற்றும் கேடயத்தை கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., மதிவாணன் வழங்கி பாராட்டினார். முதல்வர் கலைச்செல்வி, மழலையர் பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதா, துணை முதல்வர்கள் முத்துக்குமார், ஞானவேல் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us