UPDATED : ஆக 18, 2014 12:00 AM
ADDED : ஆக 18, 2014 12:00 PM
திருப்பூர்: பெருமாநல்லூர், கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் சுதந்திர தினவிழா மற்றும் விளையாட்டு தின விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சிதம்பரசாமி, திருப்பூர் மாவட்ட பவர் லூம் சங்க தலைவர் குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சிதம்பரசாமி, கொடியேற்றி, மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி, மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடந்தன.
மாணவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் சிதம்பரசாமி, குமரேசன் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
